சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தொடர் மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், மார்க்கெட்டிற்கு வரவேண்டிய 450 லாரிகளில், 350 லாரிகள் மட்டுமே வந்துள்ளன.
இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி இன்று 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், கத்தரிக்காய் ஒரே நாளில் கிலோ 20 ரூபாய் விலை உயர்ந்து 45 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோல், தொடர் கனமழை எதிரொலியாக மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளதால், தக்காளி விலை கடுமையாக உயர்ந்து ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.