இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1158 புள்ளிகள் சரிந்து, 60 ஆயிரத்துக்கு கீழே இறங்கியது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 353 புள்ளிகள் குறைந்தது. வங்கி, கட்டுமானம் உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவன பங்குகள் விலை குறைந்தது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்திருப்பது சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.