ரேபான் கண்ணாடி நிறுவத்துடன் இணைந்து, ஃபேஸ்புக் நிறுவனம், Ray-ban Stories என்ற பெயரில் புதிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்மார்ட் கண்ணாடியில் உள்ள பிரத்தியேக தொழில்நுட்பம் மூலம், ஸ்மார்ட் போனை அழுத்தாமல், கண்ணாடியை அணிந்தபடியே குரல் வழியாக ஆணைகள் இட்டு, கால் செய்யவும், ஃபோட்டோ எடுக்கவும், 30 வினாடிகள் வரை வீடியோ எடுக்கவும், இசை மற்றும் பாட்காஸ்ட் கேட்கவும் முடியும்.
299 அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 22 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த கண்ணாடி இப்போது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, இத்தாலி, அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.