வெளிநாட்டு முதலீட்டு விதிகளை மீறியதற்காக ஏன் பத்தாயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி பிளிப்கார்ட் நிறுவனத்துக்கும் அதன் நிறுவனர்களுக்கும் அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இணையவழி வணிக நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் ஆகியன வெளிநாட்டு முதலீட்டு விதிகளை மீறி முதலீடுகளைப் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
பிளிப்கார்ட் நிறுவனம் விதிகளை மீறி WS ரீட்டைல் நிறுவன இணையத்தளத்தின் வழியாகப் பொருட்களை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அமலாக்கத்துறை சென்னை அலுவலகத்தில் இருந்து பிளிப்கார்ட் நிறுவனத்துக்கும் அதன் நிறுவனர்களான சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகியோருக்கும் விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.