ரெப்போ ரேட் எனும் வங்கிகளுக்கான் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதங்களில் எந்த மார்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒரு முறை கூடி விவாதிக்கும் நிதிக் கொள்கை குழு விவாதித்தது. கூட்டத்தில் ரெப்போ வட்டி வகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என முடிவு எடுக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்,
இதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என்றும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி, 3 புள்ளி 35 சதவீதமாக தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் விளக்கம் அளித்தார்.