இந்திய பொருளாதாரத்தில் கொரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட அளவுக்கு இரண்டாவது அலையின்போது பாதிப்பு ஏற்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வேளாண் பொருட்களின் சிறப்பான அறுவடை மற்றும் வீடு மற்றும் சாலை கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் சிறப்பான செயல்பாடு காரணமாக பொருளாதாரம் அதன் தாக்கத்தை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில், பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை நீடிப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.