டெஸ்லா மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தின் வருவாய் 10 புள்ளி 29 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு முடிந்த நிலையில் பல்வேறு நிறுவனங்களில் வருவாய் கணக்கிடப்பட்டு வருகிறது. அமெரிக்க மின்சார கார் உற்பத்தி நிறுவனமான எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்திய மதிப்பில் ஏறத்தாழ 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது.
கடந்த 5 காலாண்டுகளில் டெஸ்லா நிறுவனத்தின் அதிகபட்ச வருவாய் காலாண்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.