கொரோனா பரவலின் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை துவக்கியுள்ளன.
மும்பை பங்குசந்தையில் சென்செக்ஸ் ஆயிரத்திற்கும் அதிகமான புள்ளிகள் சரிந்தது. காலை பத்தரை மணி நிலவரப்படி சென்செக்ஸ் ஆயிரத்து, 225 புள்ளிகள் வீழ்ந்து, 48 ஆயிரத்து 803 புள்ளிகளில் வர்த்தகமானது.
அதே போன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி 344 புள்ளிகள் குறைந்து 14 ஆயிரத்து 522 புள்ளிகளில் வர்த்தகமானது. வங்கிகளின் பங்குகள் மிகவும் மோசமான சரிவை சந்தித்தன.