சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருப்பதால் அடுத்து வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைய வாய்ப்புள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் பேரல் ஒன்றுக்கு, 71 டாலருக்கு விற்கப்பட்ட கச்சா எண்ணெய், தற்போது 64 டாலராக விலை குறைந்துள்ளது.
இதனால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது.
90 ரூபாயைத் தாண்டி விட்ட பெட்ரோல் விலை கடந்த 24 நாட்களாக அதே நிலையில் நீடித்து வந்த நிலையில் இன்று 16 காசுகள் குறைந்து 92 ரூபாய் 95 காசுகளுக்கு விற்கப்படுகிறது.
இதே போல் டீசல் விலையும் இன்று 16 காசுகள் குறைந்து, 86 ரூபாய் 29 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.