இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி அடைந்ததால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு கடன் பத்திரங்கள் மீதான வட்டி உயர்வு மற்றும் சர்வசேத சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் தாக்கம் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று தள்ளியதால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1939 புள்ளிகள் சரிந்து, 49 ஆயிரத்து 100ல் நிறைவுற்றது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 568 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 14 ஆயிரத்து 529ல் நிறைவுற்றது. வங்கி மற்றும் நிதி துறை பங்குகள் அதிக சரிவை சந்தித்தன.