உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கு அரசு விதித்துள்ள கட்டண வரம்பு முறை நிரந்தரமானது அல்ல என விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பி தம்பிதுரையின் கேள்விக்கு பதிலளித்த அவர், உள்நாட்டு விமானப் போக்குவரத்து 100 சதவிகிதம் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் இந்த கட்டண வரம்பு முறை நீக்கப்பட்டு விடும் என்றார்.
ஊரடங்கிற்குப் பிறகு கடந்த மே மாதம் உள்நாட்டு விமானப் போக்குவரத்து கட்டம் கட்டமாக துவங்கியது. அப்போது விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க மத்திய அரசு கட்டண வரம்பு விகிதங்களை கொண்டு வந்தது.
எகானமி வகுப்புக்கு மட்டுமே கட்டண வரம்புகள் நிச்சயிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.