எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், டிஜிட்டல் கரன்சியான பிட்காயினில் 10 ஆயிரத்து 500 கோடி கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக அறிவித்ததால், அதன் மதிப்பு ஒரே நாளில் 10 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது.
இதனால் இனிவரும் காலத்தில் டெஸ்லா கார் வாங்குவதற்கு, பிட்காயினும் ஏற்றுக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில அமெரிக்க முன்னணி நிறுவனங்களும் பிட்காயினில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பிட்காயின் பரிவர்த்தனை முறைப்படுத்தப்படாத நிலையில், ஒரு பிட்காயின் மதிப்பு 31 லட்சத்து 82 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.