இந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 6 நாட்களாக வர்த்தகம் ஏறுமுகத்தில் இருப்பதால், முதலீட்டாளர்களுக்கு 16 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது முதல் கடந்த ஒரு வாரமாக சந்தையில் முதலீடுகள் அதிகரித்து வருவதால், தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகின்றன.
வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 617 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 191 புள்ளிகள் அதிகரித்தது.