கியா மோட்டார்சின் மின்சார கார் உற்பத்தியில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 26 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
ஆப்பிளின் மின்சார கார் உற்பத்தி திட்டத்தை கியா மோட்டார்ஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் ஜியார்ஜியாவில் உள்ள ஆப்பிளின் கார் தொழிற்சாலையில் வாகன உற்பத்தியை கியா மோட்டார்ஸ் மேற்கொள்ளும்.
ஜியார்ஜியா தொழிற்சாலையில் முதற்கட்டமாக ஒரு லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படும் எனவும் அதன்பின்னர் அது 4 லட்சமாக அதிகரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே தென்கொரிய நிறுவனமான எல்ஜியின் ஓஎல்இடி திரைகளுக்கான உற்பத்தியில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.