ஜனவரி மாதத்தில் மட்டும் இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், இதுவரை 44 லட்சம் கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளனர்.
மேலும், அன்னிய முதலீட்டாளர்கள், இந்த மாதத்தில் இதுவரை, ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாயை இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர். கடந்த ஆண்டு மார்ச், 24ம் தேதி ஏற்பட்ட வீழ்ச்சியில் இருந்து, இதுவரையிலான காலத்தில், பங்குச் சந்தை சுமார் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
பொருளாதார தரவுகள் மேம்பட்டு வருவது, கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளது, தடுப்பூசி அறிமுகம் ஆகியிருப்பது ஆகியவை இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.