மும்பை பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக இன்று சென்செக்ஸ் ஐம்பதாயிரம் என்னும் புதிய உச்சத்தைத் தொட்டது.
மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் 305 புள்ளிகள் உயர்ந்து ஐம்பதாயிரத்து 97 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது.
இன்றைய வணிகநேர முடிவில் சென்செக்ஸ் 167 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 49 ஆயிரத்து 625 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 54 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 14 ஆயிரத்து 590 ஆக இருந்தது. பெட்ரோலியம், இயற்கை எரிவாயு நிறுவனப் பங்குகளின் விலை 3 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தன.
அதேநேரத்தில் மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனப் பங்குகளின் விலை 6 விழுக்காடு வரை உயர்ந்தது.