டிசம்பர் மாதத்தில் மாருதி சுசுகி வாகனங்களின் விற்பனை முந்தைய ஆண்டைவிட 20 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2020 டிசம்பரில் மாருதி சுசுகி நிறுவனம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 226 வாகனங்களை விற்றுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தைவிட 20 விழுக்காடு அதிகமாகும்.
உள்நாட்டில் மாருதி சுசுகி வாகனங்களின் விற்பனையும் முந்தைய ஆண்டைவிட 14 புள்ளி 6 விழுக்காடு அதிகரித்துள்ளது. வெளிநாட்டுக்கு ஒன்பதாயிரத்து 938 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 31 புள்ளி 4 விழுக்காடு அதிகமாகும்.