கடந்த மாதம் மாருதியின் கார் விற்பனை குறைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு தலைதூக்கிய கார் விற்பனை, பண்டிகை காலத்தில் மேலும் அதிகரித்தது. ஆனால் நவம்பரில் அது 2.4 சதவிகிதம் குறைந்தது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 133 கார்களை விற்ற மாருதியால் கடந்த மாதம் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 775 கார்களை மட்டுமே விற்க முடிந்தது.
அக்டோபர் மாதம் மாருதியின் கார் விற்பனை மிகவும் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 63 ஆயிரத்தை தாண்டியது. உள்நாட்டு விற்பனை குறைந்தாலும், கடந்த மாதம் கார் ஏற்றுமதி 29.7 சதவிகிதம் அதிகரித்ததாக மாருதி தெரிவித்துள்ளது.