இந்தியாவின் சில்லறை வணிக சந்தை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வளர்ந்து வருகிறது. இந்த சில்லறை சந்தையில் (Retail Market ) ஆதிக்கம் செலுத்த, உலகின் இரண்டு பெரிய கோடீஸ்வரர்கள் ஆன அமேசான் குழுமத்தின் ஜெஃப் பெஸோசும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியின் முகேஷ் அம்பானியும் போட்டிப்போடுகிறார்கள்..
ஆனால் இப்போது இருவருமே, இந்த யுத்தத்தில் ஒரு திருப்பு முனையை சந்திக்கும் நிலையில் உள்ளார்கள்.
ஃபியூச்சர் குழுமத்தின் 25000 கோடி மதிப்புள்ள சில்லறை சந்தைக்கான சொத்துக்களை ரிலையன்ஸ் குழுமம் வாங்க முயற்சிக்க அதை அமேசான் குழுமம் தடுக்கப்பார்க்கிறது. உள் வர்த்தகம் மற்றும் ஒப்பந்த மீறல்கள் ஆகிய குற்றசாட்டுக்களை ஃபியூச்சர் நிறுவனத்தின் மீது அமேசான் சுமத்தியுள்ளது. ஆனால் அந்த குற்றசாட்டுகளை, ஃபியூச்சர் நிறுவனம் மறுக்கிறது.
அமேசான் குழுமத்திலிருந்து பிரிந்த ஃபியூச்சர் ரீடைல் நிறுவனத்திற்கான இந்த சண்டையில் வெற்றி பெறுபவரே , இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் அன்றாடத்தேவைகளை நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பார்.
வியாபார சக்ரவர்த்திகளாக விளங்கும் இவர்கள் சிக்கியுள்ள இந்த சட்டசிக்கலில், விரைவில் வெளிவர இருக்கும் நீதிமன்ற தீர்ப்பு, இந்தியாவின் சில்லறை சந்தை உலகத்தை வெகு காலத்திற்கு நிர்மானிக்கப்போகிறது.
இதில் அமேசான் வெற்றிப்பெற்றால், அது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியின் மின் வணிக விரிவாக்கத் திட்டங்களுக்கான பின்னடைவாக இருக்கும்.
மாறாக அமேசான் தோல்வியடைந்தால், அதன் மளிகை விநியோக சங்கிலி பாதிக்கப்படும், சில்லறை சந்தையை கைப்பற்றும் எண்ணமும் சிதைந்து விடும் என்று தொழிற் வட்டாரங்கள் கூறுகின்றன.
அமேசான் வலிமையான எதிரியாக இருந்தாலும், ரிலையன்ஸ் அம்பானிக்கு எதையும் தகர்த்து வெற்றி பெறக்கூடியவர் என்ற வரலாறு உண்டு. மிக மலிவான சந்தை விலைகளின் மூலம் வெளிநாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஆட்டம் காண வைத்தவர் அவர்.
அதனால், ரிலையன்ஸின் மின் வணிக திட்டங்கள், அமேசானுக்கும் ஃபிளிப்கார்ட்டுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கும் என்று தொழிற்துறை வல்லுனர்கள் கருதுகிறார்கள்.