இந்தியாவின் தொழில்நுட்பம் மந்தநிலையில் இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார வல்லுநர்கள் குழு கூறிய இரண்டு வாரங்களுக்குப்பிறகு, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) தகவல்கள் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகின்றன.
2020-21 ஜூலை-செப்டம்பர் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதமாக சுருங்கி உள்ளது.
தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ), இன்று வெளியிட்ட இரண்டாவது காலாண்டுக்கான, அதிகாரப்பூர்வ மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தகவல்கள்படி, 1996 ல் பதிவு செய்யத் தொடங்கிய காலாண்டு வளர்ச்சி விகிதங்கள், தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளில் சுருங்கி தொழில்நுட்ப மந்தநிலை ஏற்படுவது இதுவே முதல் தடவை.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தரவு குறித்து கருத்து தெரிவித்த தலைமை பொருளாதார ஆலோசகர் கே.சுப்பிரமணியன், "நம் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தொற்றுநோய் நம்மைத் தாக்கும் முன்பு நமது பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால், மார்ச் மாதத்தில் தொற்றுநோய் நம்மைத் தாக்கியது, அதுதான் இந்த காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் எண்ணிக்கை குறையக்காரணமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசால்,மார்ச் கடைசி வாரத்தில் இருந்து மே மாத தொடக்கம் வரை நாட்டில் அமுலில் இருந்த கடுமையான முடக்கப்பின்னணியில், இந்திய பொருளாதாரம், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 23.9 சதவீதமாக சுருங்கியது குறிப்பிடத்தக்கது.