சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 38 ஆயிரம் ரூபாயை மீண்டும் தாண்டியுள்ளது.
கடந்த 28ம் தேதி சென்னையில் சவரன் தங்கம் 38 ஆயிரத்து 144 ரூபாயாக விற்பனையானது. இதையடுத்து 29ம் தேதி 37 ஆயிரத்து 928 ரூபாயாகவும், 30ம் தேதி 37 ஆயிரத்து 872 ரூபாயாகவும் குறைந்தது.
இந்நிலையில் இன்று கிராம் தங்கம் 26 ரூபாய் உயர்ந்து, 4,760 ரூபாயாகவும், சவரன் தங்கம் 208 ரூபாய் அதிகரித்து 38 ஆயிரத்து 80 ரூபாயாகவும் விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் உயர்ந்து, 65 ஆயிரத்து 300 ரூபாயாக விற்பனையாகிறது.