கொரோனா பேரிடர் காரணமாக ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியை சந்தித்தபோதும், பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா அதிக வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் 1 லட்சத்து 39 ஆயிரத்து 300 கார்களை விற்பனை செய்துள்ள டெஸ்லா நிறுவனம், ஆண்டு முடிவில் 5 லட்சம் கார்களை தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் 2019ம் ஆண்டு இதே காலகட்டத்தில் இந்திய மதிப்பில் 46 ஆயிரம் கோடியாக ரூபாயாக இருந்த டெஸ்லாவின் வருவாய், தற்போது 64 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.