கிஷோர் பியானியின் பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியதற்கு எதிராக அமேசான் தொடர்ந்த முறையீட்டில், அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் உள்ள தீர்ப்பாயத்தில் கடந்த வெள்ளியன்று அவசர வழக்காக எடுக்கப்பட்டு நடைபெற்ற விசாரணையின் போது, வரும் 26 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்படும் என்று நடுவர் அறிவித்தார்.
இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தை கைப்பற்றுவதற்கு அமேசான் மற்றும் ரிலையன்ஸ் என்ற பெரு நிறுவனங்களுக்கு இடையே நிகழும் போட்டியே இது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பியூச்சர் குழுமத்தின் மற்றொரு அங்கமான பியுச்சர் கூப்பன் நிறுவனத்தில் அமேசான் நிறுவனம் 1500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.