உலக நாடுகளில் இரண்டாம் கட்ட கொரோனா அலை வீசக்கூடும் என்ற அச்சத்தின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 4 ஆவது நாளாக சரிவை சந்தித்துள்ளது.
பிரென்ட் கச்சா எண்ணைய் பூஜ்யம் புள்ளி 8 சதவிகிதம் குறைந்து பேரலுக்கு 42.30 டாலராகவும், அமெரிக்க கச்சா எண்ணெய் பூஜ்யம் புள்ளி 6 சதவிகிதம் குறைந்து பேரலுக்கு 40.57 டாலராகவும் குறைந்துள்ளது.
லிபியாவும் தனது உற்பத்தியை அதிகரித்துள்ளதும், விலை குறைய காரணம் என கூறப்படுகிறது. விலைச்சரிவை தொடர்ந்து டிசம்பர் மாதத்திற்குள் கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினசரி 77 லட்சம் பேரல்கள் குறைக்க எண்ணைய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஓபெக் முடிவு செய்துள்ளது.