சர்வதேச முதலீட்டு நிறுவனமான KKR ரிலையன்ஸ் நிறுவனத்தில் 5500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இந்த தொகை வந்து சேர்ந்து விட்டதாகவும், அதற்காக ரிலையன்ஸ் ரீடெய்லின் 1.28 சதவிகித பங்குகள் KKR நிறுவனத்திற்கு ஒதுக்கப்படுவதாகவும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
ரிலையன்சில் பல பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிலையில், KKR--ன் முதலீட்டையும் சேர்த்து ரிலையன்ஸ் ரீடெய்லின் சந்தை மூலதன மதிப்பு 4.21 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.