புகழ்பெற்ற பன்னாட்டு கார் நிறுவனமான மெர்சிடஸ் தனது மின்சார காரான EQC-ஐ இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
முதல்கட்டமாக சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பை, புனே மற்றும் ஐதராபாத்தில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ள இதன் முதல் 50 கார்களுக்கான ஷோரூம் விலை 99.30 லட்சம் ரூபாயாகும்.
இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதலாவது மின்சார எஸ்யுவி யான இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 350 கிலோ மீட்டர் வரை செல்லும் எனவும், பேட்டரிகளுக்கு 8 ஆண்டுகள் வாரண்டி உண்டு எனவும் செய்திக் குறிப்பு ஒன்றில் மெர்சிடஸ் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வேகம் 180 கிலோமீட்டர், 5.1 நொடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் திறன் ஆகியன EQCக்கு உண்டு.
சாதாரண சார்ஜர் மூலம் 10 மணி நேரத்திலும், டிசி பாஸ்ட் சார்ஜர் மூலம் 90 நிமிடங்களிலும் கார் பேட்டரியில் மின்னூட்டம் செய்யலாம்.