ரிலையன்ஸ் சில்லறை வணிக நிறுவனத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ஜிஐசி, 5 ஆயிரத்து 512 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த முதலீட்டின் மூலம் 1 புள்ளி 22 சதவீதப் பங்குகளை ஜிஐசி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைதொடர்பு துறையை தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனம் சில்லறை வணிகத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்த முதலீடு பெறப்பட்டுள்ளது.
இருதினங்களுக்கு முன்பாக துபாயைச் சேர்ந்த முபாடாலா நிறுவனம், ரிலையன்ஸ் சில்லறை வணிக நிறுவனத்தில் 6 ஆயிரத்து 247 கோடி ரூபாயை முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.