2018 - 2019 நிதி ஆண்டுக்கான ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டு செப்டம்பர் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஜிஎஸ்டிஆர் 9, ஜிஎஸ்டிஆர் 9சி பிரிவில் கணக்கு தாக்கல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.