டாடா குழுமத்தின் சூப்பர் ஆப்பில் வால்மார்ட் சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.
இதற்காக வால்மார்ட் நிறுவனம், டாடா குழுமத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த முதலீடு உறுதியானால், டாடாவின் இ-காமர்ஸ் வணிகத்திற்கும், வால்மார்டின் பிளிப்கார்டுக்கும் இடையிலான வணிக ஒத்துழைப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்தன. டாடாவின் இந்த சூப்பர் ஆப் வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் தொடக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.