தனது முதலாவது மின்சார காரான EQC வரும் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என மெர்சிடஸ் பென்ஸ் அறிவித்துள்ளது.
ஆடம்பர கார் வரிசையில் இந்தியாவில் தனது காரை முதலாவதாக அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர மெர்சிடஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது. இதர மெர்சிடஸ் கார்களைப் போன்றே உருவாக்கப்பட்டுள்ள EQC ல் 80kWH லித்தியம் பேட்டரிகள் டிசி சார்ஜர்கள் மூலம் 90 நிமிடங்களில் முழு மின்னூட்டம் பெறும்.
652 கிலோ எடையுள்ள இந்த பேட்டரிகளுக்கு 8 வருட வாரண்டியும் வழங்கப்படும் என மெர்சிடஸ் தெரிவித்துள்ளது. ஒருமுறை மின்னூட்டம் செய்தால் சுமார் 350 கிலோ மீட்டர் வரை வாகனம் ஓடும் என்பது டெஸ்ட் டிரைவ் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
12.3 இஞ்ச் டிஸ்பிளே ஸ்கிரீன் இன்போயின்மென்ட் சிஸ்டம், ENERGIZING comfort control , முன்னிருக்கைகளில் மசாஜ் வசதி, MATRIX LED head lights, 20 இஞ்ச் அலாய் வீல்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் வரும் இந்த காரின் விலை இந்திய மதிப்பில், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.