பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நுகர்வோர் செலவிடும் விதத்திலும் மத்திய அரசு மேலும் நிதி தொகுப்பு அளிக்கும் என்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சியின் தாக்கத்தாலும், முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் பங்குகளை வாங்கியதால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 593 புள்ளிகள் உயர்ந்து, 37 ஆயிரத்து 981ல் நிறைவுற்றது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 177 புள்ளிகள் அதிகரித்து, 11 ஆயிரத்து 227ல் நிலை கொண்டது.
வங்கி, உலோகம், மருந்து துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமானது.