இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து 4வது நாளாக சரிவடைந்துள்ளது. காலையில் வர்த்தகம் தொடங்கிய போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
பின்னர் ஓரளவு மீண்டு, 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 97 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 154ல் நிலை பெற்றது.
வங்கி, நிதி சேவை, உலோகம் உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தகவல் தொழில்நுட்பம், மருந்து துறை நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன.