இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 811 புள்ளிகள் சரிந்து 38 ஆயிரத்து 34 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 254 புள்ளிகள் குறைந்து 11 ஆயிரத்து 250ல் நிறைவடைந்தது.
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை தாக்க கூடும் என்ற அச்சத்தின் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று தள்ளியதே இந்த சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
ரியல் எஸ்டேட், தொலைத் தொடர்பு, உலோகம், வாகன உற்பத்தி உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவன பங்குகள் அதிக அளவில் சரிவடைந்தன. அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து, 73 ரூபாய் 38 காசுகளாக இருந்தது.