ஆகஸ்ட் 27ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரியில் மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய இழப்பீடு குறித்து இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. மாநில அரசுகளின் மறைமுக வரிகள் அனைத்தும் ஜிஎஸ்டியில் இணைக்கப்பட்டன.
அதன் காரணமாக மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு கட்ட 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
கடந்த 5 மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் மத்திய மாநில அரசுகள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன.
மாநில அரசுகளின் சரக்கு சேவை வரி வருமானம் மிகப் பெரிய அளவில் குறைந்துள்ளது.மாநிலங்கள் நிதிநெருக்கடியை சந்தித்துள்ள இக்கட்டான சூழலில், மத்திய அரசிடமிருந்து இழப்பீடு கிடைக்குமா என்று ஜிஎஸ்டி கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.