கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போயிங் நிறுவனம் மேலும் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெருந்தொற்று காரணமாக உலக அளவில் விமானப்பயணம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. மேலும் ரத்து செய்யப்பட்ட ஆர்டர்களால் விமானத் தயாரிப்பாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இழப்பைச் சரிகட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் போயிங் நிறுவனம் மொத்த ஊழியர்களில் 10 விழுக்காடு பேரை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் விமானப்போக்குவரத்தில் தொடர்ந்து தேக்கநிலை நீடித்து வருவதால், சில கடினமான முடிவுகளை எடுக்க இருப்பதாக போயிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவ் கால்ஹவுன் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் முதல் மேலும் பல பணியாளர்களை பணியிலிருந்து விடுவிக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.