கொரோனா தாக்கத்தால் பெரும் சரிவை கண்டிருந்த ஆட்டோமொபைல் துறை தற்போது அதிலிருந்து மெல்ல மீண்டு வருகிறது. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனத்தின் கடந்த மாதம் வாகன விற்பனை 1.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதில் உள்நாட்டு விற்பனை ஒரு லட்சத்து ஆயிரத்து 307 ஆக இருந்தது. கடந்த ஆண்டு ஜூலையில் ஒரு லட்சத்து ஆறு வாகனங்களில் விற்பனையாகி இருந்தன. இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் வெறும் 2 விழுக்காடு மட்டுமே சரிவைக் கண்டுள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் போன்ற நிறுவனங்களும் வாகன விற்பனையில் லேசான சரிவை கண்டுள்ளன.