டெல்லியில் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை முப்பது விழுக்காட்டில் இருந்து 16 புள்ளி ஏழு ஐந்து விழுக்காடாகக் குறைக்க மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த பின்னரும் அதற்கேற்றபடி இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படவில்லை. அதற்கு மாறாகப் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசும், மதிப்புக் கூட்டுவரியை மாநில அரசுகளும் உயர்த்தின.
இதனால் பெட்ரோல் டீசல் விலையில் பெரும் மாற்றம் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை 30 விழுக்காட்டில் இருந்து 16 புள்ளி ஏழு ஐந்து விழுக்காடாகக் குறைக்க டெல்லி மாநில அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதனால் டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை 82 ரூபாயில் இருந்து 73 ரூபாய் 64 காசுகளாகக் குறையும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.