கொரோனா பரவலின் முடிவுக்கு பிறகு லத்தீன் அமெரிக்கா கடுமையான வறுமையை சந்திக்கும் என்று அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு வங்கி தலைவர் லூயிஸ் ஆல்பர்டோ மோரேனோ தெரிவித்துள்ளார்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி சரிவடைந்த நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஊரடங்கு நடவடிக்கையால் நடப்பாண்டில் 8 முதல் 10 சதவீதம் வரை பொருளாதாரம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வெனிசுலாவில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மோரேனோ கூறினார்.
இந்த ஆண்டு ஏறத்தாழ இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 49 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு வங்கி ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும் அதில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த செலவழிக்கப்படும் என்றும் லூயில் ஆல்பர்டோ மோரேனோ குறிப்பிட்டுள்ளார்.