ஹுண்டாய் நிறுவனம் உலக அளவில் ஒரு லட்சம் கோனா மின்சாரக் கார்களை விற்பனை செய்துள்ளது. ஹுண்டாய் நிறுவனம் கோனா என்னும் பெயரில் மின்சாரக் காரை 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 28 மாதக்காலத்தில் உலகம் முழுவதும் மொத்தம் ஒரு லட்சம் மின்சாரக் கார்களை விற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் நானூறு கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்ல முடியும் என்பதாலும், விரைவாக சார்ஜ் செய்யும் வசதிகளைச் செய்துள்ளதுடன், பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாலும் வாடிக்கையாளர்கள் கோனா காரைத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மின்சாரக் கார்களுக்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதால் 2025ஆம் ஆண்டுக்குள் 5 லட்சத்து 60 ஆயிரம் மின்சாரக் கார்களை விற்பது என்னும் இலக்கை அடைய உதவியாக இருக்கும் என ஹுண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.