எச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து சிவ நாடார் விலகியுள்ளார். அவர் மகள் ரோஷ்னி நாடார் மல்கோத்ரா புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல் டெக்னாலஜீஸ் செபி அமைப்பில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இரண்டாயிரத்து 925 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ஈட்டிய லாபத்தைவிட 705 கோடி ரூபாய் அதிகமாகும். எச்.சி.எல். நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து சிவ நாடார் விலகி, அவர் மகள் ரோஷ்னி நாடார் மல்கோத்ரா புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளதாகவும், இந்த மாற்றம் இன்றுமுதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக சிவ நாடார் தொடர்ந்து நீடிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளது.