ஏர் இந்தியா நிறுவனம் ஊழியர்களில் ஒருபிரிவினரை 5 ஆண்டுகளுக்கு ஊதியம் இல்லாத விடுப்பில் அனுப்ப முடிவு செய்துள்ளது.
கொரோனா பாதிப்பால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக ஊழியர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணித் தகுதி, உடல்நலம் போன்றவற்றை ஆராய்ந்து அதில் தேறாதவர்களை 6 மாதம் முதல் 5 ஆண்டு காலம் வரை ஊதியமில்லாத கட்டாய ஓய்வில் அனுப்பி வைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரத்தை அதன் தலைவரான ராஜீவ் பன்சாலுக்கு விமான நிறுவனத்தின் இயக்குனர்கள் வழங்கியுள்ளனர்.