இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் 2 சதவீதம் அளவுக்கு சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 661 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 36 ஆயிரத்து 33 புள்ளிகளாக குறைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 193 புள்ளிகள் சரிவடைந்து 10 ஆயிரத்து 610 புள்ளிகளாக வீழ்ந்தது.
இந்தியாவில் கொரேனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது, முதலீட்டாளர்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதால் சந்தையில் சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர். வங்கி, நிதி சேவை, உலோகம் துறை சார்ந்த நிறுவன பங்குகள் விலை குறைந்தன.
அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 காசுகள் குறைந்து, 75 ரூபாய் 43 காசுகளாக இருந்தது.