மார்ச் 31க்கு பிறகு பிஎஸ் 4 வாகனங்கள் விற்கப்பட்டிருந்தால், அதை பதிவு செய்யக் கூடாதென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் காற்று மாசை குறைக்கும் வகையில் ஏப்ரல் 1 முதல் பிஎஸ் 4 வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து பிஎஸ் 6 வாகன பயன்பாட்டுக்கு மாற முடிவு செய்யப்பட்டது. இதனால் மார்ச் 31க்கு பிறகு பிஎஸ்4 வாகனங்களை விற்க முடியாத நிலை உருவானது. இருப்பினும் ஊரடங்குக்கு பிறகு 10 நாள்கள் மட்டும் இருப்பிலுள்ள 10 சதவீத பிஎஸ்4 வாகனங்களை விற்க உச்சநீதிமன்றம் அனுமதித்தது.
இந்நிலையில் பிஎஸ் 4 வாகன விற்பனை தொடர்பான வழக்கு, காணொலி மூலம் உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது அனுமதித்த அளவை காட்டிலும் அதிக வாகனங்களை விற்று வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மோசடி செய்துவிட்டதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவு இல்லாமல் மார்ச் 31க்கு பிறகு விற்கப்பட்ட பிஎஸ்4 வாகனங்களை பதியக்கூடாதெனவும் உத்தரவிட்டனர்.