தொழில்துறையில் முன்னணி வளர்ச்சியை அடைவதை நோக்கமாக கொண்டு பாடுபட விப்ரோ நிறுவன ஊழியர்களுக்கு, அந்நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி தியரி டெலாபோர்டே அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று பதவியேற்றுக் கொண்ட அவர் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், தொழில்துறையில் உடனடி சவால்கள் இருந்தபோதிலும், அதிலிருந்து வலுவாக வெளிப்படுவோம் என்பதில் சந்தேகம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்திற்காக ஊழியர்கள் பாடுபட்டு பங்குதாரர்களின் நலன்களுக்காக, நிலையான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் எனவும் டெலாபோர்டே குறிப்பிட்டு உள்ளார்.