சுமார் 38 லட்சம் கோடி ரூபாயுடன், உலகிலேயே அதிகம் அன்னிய செலாவணியை இருப்பு வைத்துள்ள 5 ஆவது நாடாக இந்தியா உயர்ந்துள்ளது.
முதல் காலாண்டில் நடப்புக் கணக்கில் சேர்ந்த உபரி தொகை, பங்குசந்தை முதலீடுகள் மற்றும் நேரடி அன்னிய முதலீடுகளின் காரணமாக இந்த அளவிற்கு அன்னிய செலாவணி உயர்ந்துள்ளதாக மும்பை ஸ்டான்டார்ட் சார்ட்டட் நிறுவன பொருளாதார நிபுணர் அனுபூதி சகாய் தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ள வெளிநாட்டு முதலீடுகளும் இதில் அடங்கும்.
கொரோனாவால் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அன்னிய செலாவணி இருப்பு அதிகரித்திருப்பது சந்தையில் ஏற்படும் இழப்புகளை சமாளிக்கவும், முதலீட்டுக் கடன்களை தீர்க்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்ற நம்பிக்கையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், கடன் ரேட்டிங் நிறுவனங்களுக்கும் ஏற்படுத்தவும் உதவும். அன்னிய செலாவணி கையிருப்பில் சீனா,ஜப்பான், சுவிட்சர்லாந்து, ரஷ்யா ஆகியன முதல் 4 இடங்களில் உள்ளன.