ஜூன் மாதத்தில் சரக்கு சேவை வரியாக 90 ஆயிரத்து 917 கோடி பெறப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் மார்ச் மாதத்தில் இருந்தே சரக்கு சேவை வரி வருவாய் குறையத் தொடங்கியது.
தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுத் தொழில் நிறுவனங்கள் பெருமளவு செயல்படத் தொடங்கி உள்ள நிலையில், வரி வருவாயும் சற்று உயர்ந்துள்ளது.
ஜூன் மாதத்தில் சரக்கு சேவை வரியாக 90 ஆயிரத்து 917 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது 9 விழுக்காடு குறைவாகும்.
இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 32 ஆயிரத்து 294 கோடி ரூபாயும், மே மாதத்தில் 62 ஆயிரத்து ஒன்பது கோடி ரூபாயும் சரக்கு சேவை வரியாகக் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஏப்ரல் மாதத்தில் 72 விழுக்காடும், மே மாதத்தில் 38விழுக்காடும் சரக்கு சேவை வரி வருவாய் வீழ்ச்சியடைந்துள்ளது.