கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு குறைந்திருக்கும்போது, இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
டுவிட்டரில் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகப் பேசுங்கள் என்கிற பிரச்சார இயக்கத்தில் சேர மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்ந்து 22 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களிடம் அரசு கொள்ளையடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். எரிபொருள் விலை உயர்வைத் திரும்பப் பெற்றுக் கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி அனைவரும் குரலெழுப்ப வேண்டும் என்றும் ராகுல் கேட்டுக்கொண்டுள்ளார்.