ஐசிஐசிஐ, ஸ்டேட் வங்கிகளில் வாங்கிய கடன்களில் நடந்த முறைகேடு தொடர்பாக வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் சில வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
மொசாம்பிக், இந்தோனேஷியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் வீடியோகான் நிறுவனத்தின் எண்ணெய் கிணறுகள் மற்றும் எரிவாயு சொத்துக்களை வீடியோகான் நிறுவனம் வாங்குவதற்கு வழங்கப்பட்ட கடன்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ மற்றும் ஐடிபிஐ வங்கிகளின் சில அதிகாரிகள் மீதும் வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே ஐசிஐசிஐ வங்கியில் ஆயிரத்து 875 கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தா கோச்சார் மற்றும் வேணுகோபாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.