பல நாடுகளில் கொரோனா தொற்று அதிக எண்ணிக்கையில் பரவுவதால்,மீண்டும் கச்சா எண்ணெய்த்தேவை குறைவதன் எதிரொலியாக, அதன் விலையும் குறைந்துள்ளது.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 42.04 டாலராகவும், அமெரிக்க கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 39.72 டாலராகவும் குறைந்துள்ளது.
கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை 9 சதவிகிதம் வரை அதிகரித்ததால், கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் மகிழ்ச்சி அடைந்தன. இந்த நிலையில் வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளில் கொரோனா தொற்று அலை வீசுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட 2 ஆவது மாநிலமான விக்டோரியாவில் வைரஸ் தொற்று அதிகரித்துள்ளதும் கச்சா எண்ணெய் விலை சரிய காரணமாக கூறப்படுகிறது.