ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்த கடனை திருப்பி வசூலிக்க, அதன் தலைவர் அனில் அம்பானி மீது, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் பாரத ஸ்டேட் வங்கி வழக்கு தொடுத்துள்ளது.
அனில் அம்பானியின் தனிப்பட்ட உத்தரவாதத்தின் பேரில் கடன் வழங்கப்பட்டதாகவும், எனவே நிலுவைத் தொகையான 1200 கோடி ரூபாயை அவரிடம் இருந்து வசூலித்து தருமாறும் பாரத ஸ்டேட் வங்கி தனது மனுவில் கூறியுள்ளது. இதை ஏற்றுக் கொண்டுள்ள தீர்ப்பாயம் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.
இது நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன் என்றும், அம்பானிக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்ட கடன் அல்ல என்பதால் தீர்ப்பாயத்திற்கு தக்க பதில் வழங்கப்படும் என அவரது தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.